Featured post

இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில்

 *‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது*     நந்தினி ஜ...

Thursday 6 May 2021

மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார். ; அன்றே கணித்த

*மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார். ; அன்றே கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்*


*தமிழகம் முழுக்க வேட்பாளர்களின் வெற்றியை முன்கூட்டியே கணித்து அசத்திய பாலாஜி ஹாசன்*


*ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையும் துல்லியமாக கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்*

 Click here for videos: 

https://www.youtube.com/watch?v=fGj6lYYt9Pk

https://www.youtube.com/watch?v=ApvqDQtjQk8

https://www.youtube.com/watch?v=Bf_whYjf1aU

https://www.youtube.com/watch?v=7zCR2Orfepk

https://www.youtube.com/watch?v=LlIwzhp_d18

https://www.youtube.com/watch?v=OHa5SFrbTno

ஜோதிட உலகில் இந்த இளம் வயதிலேயே ஆச்சர்யத்தக்க வகையில் துல்லியமான கணிப்புகளை கூறி பிரமிக்க வைத்து வருகிறார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் ஜெயிப்பார் என்று சொன்னபோது, ஜோ பைடன் தான் வெற்றி பெறுவார் என்று சொன்னதாகட்டும், இலங்கை தேர்தலில் ராஜபக்சே தான் வெல்வார் என சொன்னதாகட்டும், அவ்வளவு ஏன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி நேர்காணலிலேயே ஆணித்தரமாக அவர் கூறியது, என அவரது கணிப்புகள் தொடர்ந்து நிஜமாகி வருவது ஜோதிட உலகில் மாபெரும் ஆச்சர்யம்.


அந்தவகையில் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அவர் கணித்த கணிப்புகள் பல இடங்கள் அப்படியே முழுமையாக நடந்தேறி இருக்கின்றன.


கடந்த முறை மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தபோதும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சாதுர்யமாக ஆட்சியை தக்கவைத்து கொண்ட பின்னரும், இனி மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு எப்போதும் வாய்ப்பே இல்லை, என கடந்த சில வருடங்களாகவே பலரும் எதிர்மறை ஆருடம் சொல்லி வந்தனர். 


அந்த சமயத்தில், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தான், அடுத்த முதல்வராக வருவார் என்று, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே உறுதியாக கூறியிருந்தார் பாலாஜி ஹாசன். வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கணிப்பில் கூட,, தான் ஏற்கனவே கூறிய கணிப்பில் இருந்து அவர் மாறவில்லை. அவர் கணித்தது போலவே திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இதோ ஸ்டாலின் அவர்கள் முதல்வராகவும் பதவியேற்க போகிறார்.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதகங்களை கணித்து, இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என பாலாஜி ஹாசன் கணித்தார். அதுமட்டுமல்ல, அவற்றை வாக்கு எண்ணிக்கைக்கு முன்கூட்டியே வீடியோவாக யூ ட்யூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளார். அவர் கணித்து கூறியதில் 180 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். அந்தவகையில் அவரது கணிப்பில் 80 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.


https://www.youtube.com/watch?v=fGj6lYYt9Pk


கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில், மறைந்த வசந்த் அன் கோ வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தான் வெற்றி பெறுவார் என தனது கணிப்பில் உறுதி செய்தார். பாலாஜி ஹாசன். 


https://www.youtube.com/watch?v=ApvqDQtjQk8


அதேபோல நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தான் வெற்றி பெறுவார் என்றே அனைத்து கருத்து கணிப்புகளும் கூறின. ஆனால் வானதி சீனிவாசன் தான் வெற்றி பெறுவார் என பாலாஜி ஹாசன் கணித்தார்.. கடைசி நேரம் வரை இவரா, அவரா என நடந்த இழுபறிக்கு பிறகு வானதி சீனிவாசனே வெற்றி பெற்றுள்ளார்.


அதேபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிரான அலை உருவாகி விட்டதாகவும் அதனால் இந்தமுறை பிஜேபி தான் ஆட்சியை பிடிக்கும் என பலரும் கருத்துக்கணிப்பு சொல்லி வந்த நிலையில் தனது துல்லிய ஜோதிட கணிப்பு மூலமாக மம்தா வெற்றி பெறுவார் என உறுதியாக கூறினார் பாலாஜி ஹாசன்.. இதோ அதுவும் பலித்து விட்டது.


https://www.youtube.com/watch?v=Bf_whYjf1aU


மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு தோல்வி என கணித்த அதேசமயம் அஸ்ஸாமில் பிஜேபி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதையும் கணித்து கூறி இருந்தார். இந்த தேர்தலில் பாஜக சற்றே ஆசுவாச பெருமூச்சு விட காரணமாக அமைந்தது இந்த அஸ்ஸாம் வெற்றி மட்டும் தான்.


https://www.youtube.com/watch?v=7zCR2Orfepk


இதேபோலத்தான் கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்க கடத்தல் விவகாரம் என கம்யூனிஸ்ட் அரசை பிரச்சனைகள் சூழ்ந்திருந்ததை காரணம் காட்டி, இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் தோல்வியுறும், காங்கிரஸ் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் கூறின.. ஆனால் பாலாஜி ஹாசனோ மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என கணித்தார். கணித்தது பலித்திருக்கிறது.


https://www.youtube.com/watch?v=LlIwzhp_d18&t


புதுச்சேரியை பொறுத்தவரை ரங்கசாமி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறி வந்தன. அவர்கள் கருத்துக்கு ஏற்ப,  ரங்கசாமி தான் முதல்வர் ஆவார் என்று கூறிய பாலாஜி ஹாசன், ஆனால் அவருக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி பலத்தில் தான் ஆட்சி அமைப்பார் என்றும் கணித்து கூறி இருந்தார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்துள்ளது.


https://www.youtube.com/watch?v=M2cQ8QwqGrA


அந்தவகையில் பாலாஜி ஹாசனின் துல்லியமான கணிப்புகள் மீண்டும் அவரை பற்றி மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேச வைத்துள்ளன.

No comments:

Post a Comment