Featured post

தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது

 *தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!* *சென்னை, டிசம்பர் 16, 2025:* தென்னிந்தியாவின் இசைத்...

Tuesday, 28 September 2021

சின்ன பண்ண பெரிய பண்ண

 " சின்ன பண்ண பெரிய பண்ண"


கதையின் நாயகனாக போண்டாமணி நடித்துள்ள " சின்ன பண்ண பெரிய பண்ண"


வடிவேல், விவேக், சந்தானம், சூரி, யோகிபாபுவை போல் கதையின் நாயகனாக போண்டாமணி நடித்துள்ள படம்தான் " சின்ன பண்ண பெரிய பண்ண"

மேலும் இதில் ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், கிங்காங், சுப்புராஜ், விஜய்கணேஷ், ஜான்சன், இன்னும் பலர் நடித்துள்ளனர்.



ரங்கதுரை, கவிதா குப்புசாமி இருவரும் பாடல்களையும்,
பிரேம்ஜி இசையையும், லட்சுமணன் எடிட்டிங்கையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கிராம நிர்வாக அதிகாரியாக வரும் போண்டாமணி , அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ண யிடம் மோதுகிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங்களை தடுக்கலாம்" என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து தந்துள்ளேன்" என்று கதையை பற்றி கூறியுள்ள பகவதி பாலா  இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். இவர் பத்து படங்களுக்கு மேல் இயக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், மைசூர், ஓசூர், திருச்சி, சென்னை பகுதிகளில் வளர்ந்துள்ள " சின்ன பண்ண பெரிய பண்ண" படத்தை சி.ப. தனசேகரன்
பகவதி பாலா இருவரும் இணைந்து எஸ். பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.


No comments:

Post a Comment