Featured post

Samsari Sanyasi Review

Samsari Sanyasi Tamil Movie Review அந்த காலத்துல பாத்தீங்கன்னா ரெண்டு படம் ஒரே படமா release பண்ணிருக்காங்க. இது அப்போ ஒரு trend அ follow பண்...

Thursday, 9 September 2021

முழுக்க முழுக்க பெண் தொழில்நுட்ப கலைஞர்கள்

                                முழுக்க முழுக்க பெண் தொழில்நுட்ப கலைஞர்கள்                                                                                     கூட்டணியில் உருவாகும் படம்..

பெண்களை மையப்படுத்திய படைப்புகள் அவ்வப்போது சில வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.. ஆனால் அவை பெரும்பாலும் ஆண் படைப்பாளிகளின் எண்ணங்களில் தோன்றிய படைப்புகளாகவே தான் இருக்கின்றன. ஆனால் ரூபி பிலிம்ஸ் ஹசீர் இதில் சற்றே வித்தியாசமான ஒரு முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.


ஆம். பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை பெண் இயக்குனர், பெண் ஒளிப்பதிவாளர், பெண் இசையமைப்பாளர் என பெண்கள் பணிபுரியும் கூட்டணியை வைத்தே தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குனர் பாக்யா இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கிறார்., சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணிபுரிந்த சின்னு குருவில்லா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி மற்றும் தற்போது ஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் என இதுவரை நான்கு படங்களை தயாரித்த ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐந்தவாது படைப்பாக இந்தப்படம் உருவாகிறது. விரைவில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment