Featured post

Aari Arjunan starrer 4th Floor Set for February Release

 *Aari Arjunan starrer 4th Floor Set for February Release"* Aari Arjunan's 4th Floor, right from its time of announcement has been ...

Friday, 17 September 2021

Kannan Ravi Group தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி வழங்கும்

 Kannan Ravi Group தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி வழங்கும், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும், இராவணகோட்டம் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! 



நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்,  Kannan Ravi Group சார்பில்  தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி தயாரிக்கும் “இராவணகோட்டம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 


படம்  குறித்து தயாரிப்பாளர்   திரு. கண்ணன் ரவி கூறியதாவது.... 


“இராவணகோட்டம்” படத்தின் திரைப்படத்தின் இந்த பயணம் மனதிற்கு மிக நெருக்கமானதும், ப்ரத்யேகமானதுமாகும். மற்ற அனைத்து படங்கள் போலவே, இந்த பொது முடக்க காலத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் பல தடைகளை சந்தித்தது. தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்தது, படக்குழு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தான் உறுதியளித்தபடி சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை முடித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இராவணகோட்டம் திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில்  மிக முக்கியமான திருப்புமுனை திரைப்படமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும் தன் நடிகரை புகழ்வது போல் இதை நான் கூறவில்லை. படத்தில் சாந்தனு நடித்திருந்த காட்சிகளை பார்த்துவிட்டே, இதனை கூறுகிறேன். விரைவில் படத்தின் போஸ்ட புரடக்சன் பணிகளும் முடிக்கப்படவுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ, இசை, உலக திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார். 



இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறியதாவது... 

இப்படத்தில் மிகுந்த ஈடுபாடுடனும், அர்ப்பணிப்புடன், உழைத்து உருவாக்கிய தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவி  அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படக்குழுவிலுள்ள அனைவருக்குமே  இது ஒரு முக்கியமான திரைப்படம், அவருடைய ஆதரவின் காரணமாக எங்கள் கனவு படைப்பு  மிக அழகாக  உருவானதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ்  மிகத் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில்  ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்பவியலாளர்களும் முழு அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை  வழங்கியுள்ளனர். இத்திரைப்படம்  அனைத்து உள்ளங்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன் என்றார். 


விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியுள்ள,

இராவணகோட்டம் திரைப்படத்தை Kannan Ravi Group சார்பில்  தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி தயாரித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இளையதிலகம் பிரபு சார், இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

No comments:

Post a Comment