Featured post

*A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus,

 *A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus, the Conv...

Tuesday, 28 September 2021

கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ்

       

கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டியான, 'Mr, Miss & Mrs Fashion World 2021 International’-ன் இறுதிச்சுற்றுகளில் முறையே, பாஸ்கர் தனசேகர், ராதிகா தேவ் மற்றும் பிரியா கிஷோர் ஆகியோர் பட்டங்களை தட்டிச் சென்றனர்

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தற்போது Mr, Miss & Mrs Fashion World 2021’ இறுதிப்போட்டியை மிகப் பிரமாண்டமாக, கோவாவில் Big Daddy கப்பலில் நடத்தியுள்ளது.

இந்த மாபெரும் போட்டியின் வாயிலாக கிடைத்த தொகையானது, கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் பொது சேவை நிதிக்கு இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் அமலன் அவர்களால் வழங்கப்பட்டது.














































































ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாபெரும் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து அழகும், திறமையும் வாய்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, பாலிவுட் நடிகர் ஷபிர் அலி, நடிகர் பாலாஜி முருகதாஸ், நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன், ஃபேஷன் குயின் சினேகா நாயர் மற்றும் 'மிஸ்ஸஸ் இந்தியா எர்த்' பட்டம் வென்றவரும், மருத்துவருமான ஜெயா மகேஷ் ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், Mr Fashion World 2021 International பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கர் தனசேகர் வென்றார். Miss Fashion World 2021 International பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த ராதிகா தேவ் மற்றும் Mrs Fashion World 2021 International பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியா கிஷோர் ஆகியோர் தட்டிச் சென்றனர். வெற்றியாளர்களுக்கு, பாலாஜி முருகதாஸ், நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, ஸ்னேகா நாயர் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் மகுடம் சூட்டினர். மேலும், வெற்றி பெற்ற மூவரும், துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லண்டன் உள்ளிட்ட சர்வதேச மாடலிங் தளங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், இந்தியாவில் கப்பல் பயணத்தில் இவ்வளவு பெரிய போட்டி நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி, போட்டியைத் தொடர்ந்து கண்கவர் IFL ஃபேஷன் ஷோவும் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும், ஆஷாவின் 'மேக்3 மேக் ஓவர்' நிறுவனம் அழகு படுத்திய நிலையில், நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன் இந்த மாபெரும் போட்டியை வடிவமைத்திருந்தார்.

No comments:

Post a Comment