Featured post

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal*

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal* Yash Is Raya. Period. ‘Daddy’s Home’ Echoes Through a Savage Tox...

Monday, 20 September 2021

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ஃபேண்டசி

 *அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ஃபேண்டசி காமெடி படமாக உருவாகும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'*


லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இப்படத்தை அறிமுக இயக்குநர்  விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.


ஃபேண்டசி காமெடி ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர். பிரபு திலக், ‘A1’ மற்றும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


படத்தின் டைட்டில் இளைய மற்றும் இணைய தலைமுறையினரை கவர்ந்திருப்பதால், தொடக்க விழாவின் போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

No comments:

Post a Comment