Featured post

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal*

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal* Yash Is Raya. Period. ‘Daddy’s Home’ Echoes Through a Savage Tox...

Saturday, 25 September 2021

OTT யில் களமிறங்கும் நடிகை சாந்திப்பிரியா !

 OTT யில் களமிறங்கும் நடிகை  சாந்திப்பிரியா ! 


எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா, அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார். பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். அக்கா போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார். நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்து இப்போது   OTT மூலம் மீண்டும் நடிக்க  களமிறங்கியுள்ளார். 


நேற்று செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள். திரைத்துறையிலிருந்து விலகிய பிறகு தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார். 2012 க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original  நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment