Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Thursday, 30 September 2021

தெலுங்கு சினிமா உலகின் இளம் நட்சத்திரமாக

 கீர்த்தி ஷெட்டி பிறந்த நாளுக்கு வாழ்த்தியது RAPO19 படக்குழு ! 


தெலுங்கு சினிமா உலகின் இளம் நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். 


தற்போது முன்னணி நாயகர்களின் பெரும் பட்ஜெட் படங்களில்  நடித்து வரும் அவர், பிரமாண்டமாக உருவாகும்  RAPO19 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக RAPO19 படத்துடன் கூடிய ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி ஒரு பக்க போஸில் புன்னகைத்து கொண்டு இருக்க, இந்த வருடம் அவருக்கு இனிமையாக அமைய படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. 




நடிகர் ராம் பொத்தினேனி,  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குகிறார்.  Srinivasaa  Silver Screen சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி  இப்படத்தை தயாரிக்கிறார். பவன் குமார் படத்தை வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment