Featured post

90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு

 *“90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு '96'” ; பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘நினைவெல்லாம் நீயடா’*  ‘சிலந்தி’, ‘ரணதந்த...

Monday 6 September 2021

NETFLIX தனது அடுத்த மலையாள திரைப்படமாக, “

 NETFLIX  தனது அடுத்த  மலையாள  திரைப்படமாக,   “மின்னல்  முரளி” படத்தை  அறிவித்துள்ளது.

மின்னல் வேக சூப்பர்ஹீரோவாக கலக்கியுள்ளார் டோவினோ தாமஸ்!

இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமையுடன், தீமையை எதிர்த்துப் போராடும், உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்களை  யார் தான்  விரும்புவதில்லை? இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படங்களில் ஒன்றான 'மின்னல் முரளி', NETFLIX  திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த   சூப்பர் ஹீரோ படத்தில், மலையாள நட்சத்திரமான டோவினோ தாமஸ்  ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோ மின்னல்முரளியாக நடித்துள்ளார். படத்தில் அவரை  ஒரு மின்னல் தாக்க, அதன் மூலம் அவருக்கு பல சூப்பர் பவர் கிடைக்கிறது அதைக்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரசிகர்களுக்கு தங்களுக்குப் பிடித்தமான சூப்பர் ஹீரோவைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களில்  டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது

 படம் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது..

மக்கள் தங்கள் வாழ்வுடனும் உணர்வுகளுடனும் நெருக்கமாக உணரும் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க நினைத்தோம். ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் முக்கிய  சாராம்சம் ஆக்சன் அதிரடி தான்  என்றாலும், எங்களது குறிக்கோள், ஒரு வலுவான கதையின் பின்னணியில் தான் ஆக்சன் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இப்படத்தில் ஆக்சன் இருக்கும் அதே அளவு உணர்வுபூர்வமான கதையும் இருக்கும்.  இப்படம் மிகவும் உற்சாகமான அனுபவமாக  இருக்கும், படத்தின்  வெளியீட்டுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஒரு கனவுத் திரைப்படமாகும்,  இறுதியாக எங்கள் படைப்பு  Netflix தளத்தில் உலகளவில்  வெளியிடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

Weekend Blockbuster  நிறுவனம் சார்பில், ஷோபியா பால் கூறியதாவது…

ஒரு தயாரிப்பாளராக, இது எனக்கு மிகவும் சவாலான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் பயணத்தில் நான் மிகவும்  பெருமைப்படுகிறேன். இந்த 'உள்ளூர்' சூப்பர் ஹீரோ - மின்னல் முரளியை திரையில் கொண்டு வர,  நாங்கள் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அனைத்து உபகரணகளையும் சிறப்பான முறையில் ஒன்றிணைத்துள்ளோம். இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது, இது உணர்ச்சி மிக்க  மனிதனின் கதை. மின்னல் முரளியை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

 Netflix நிறுவனத்துடன் இணைந்து எங்கள்  மலையாள படம் வெளிவரவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, " மின்னல் முரளி " வெறும் ஆரம்பம் தான். அடுத்தடுத்து நிறைய ஆச்சர்யங்கள் அரங்கேறும் என்றார்.

"மின்னல் முரளி" படத்தில் பணிபுரிந்ததை பற்றி டோவினோ தாமஸ் கூறியதாவது…

இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நான் அந்த கதாபாத்திரத்துடன்  ஒன்றிப் போய் விட்டேன், என்னுடைய நேரங்கள் அனைத்தையும் இயக்குனருடன் இணைந்து, எவ்வளவு சிறப்பாக இப்படத்தை உருவாக்க முடியுமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. உலகின் இந்த மோசமான சூழ்நிலையிலும் Netflix போன்ற தளங்கள் மூலம் தனது வீட்டில் திரைப்படங்களை பார்த்து ஆதரவு கொடுத்த, அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். Netflix மூலம் "மின்னல் முரளி" பார்க்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

 இயக்குனர் பிரதிக்‌ஷா ராவ், Films and Licensing, Netflix India கூறியதாவது....

மலையாள சினிமா புதுவிதமான கதை சொல்லும் பாணி மற்றும் வியக்கதக்க திரைப்பட உருவாக்க முறைகள் மூலம்,  பார்வையாளர்களை கட்டிபோட்டுவைத்துள்ளது. மின்னல் முரளி திரைப்படத்தை Netflix-ல் வெளியிடுவதன் மூலம், மலையாள திரைப்பட கதைகளை வெளி உலகிற்கு அறிமுகபடுத்தும் எங்களது நோக்கம் நிறைவேறியதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டோவினோ தாமஸ் நடிக்கும், இந்த சூப்பர் ஹீரோ கதை, பார்வையாளர்களை மகிழ்விக்கும் திரைப்படமாக அமையும்.

காத்திருங்கள் இடியுடன் கூடிய மின்னல் விரைவில் உங்களை தாக்கும், மின்னல் முரளி Netflix தளத்தில் மட்டுமே !

No comments:

Post a Comment