Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Saturday 30 October 2021

டாக்டர் படம் தான் என் 14 வருட சினிமா போராட்டத்திற்கு கிடைத்த

 டாக்டர் படம் தான் என் 14 வருட  சினிமா போராட்டத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என்று நடிகர் கராத்தே கார்த்தி கூறுகிறார்.


மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த கராத்தே கார்த்தி அகில இந்திய காவல் துறை பாக்சிங் போட்டியில் 2003 ஆம் ஆண்டு வெற்றிபெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். அதுமட்டு மல்லாது கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியதோடு, அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சேம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக் பாக்சிங் ஆகிய கலைகளும் கற்றவர்.









பின்பு சினிமா மீதும், நடிப்பின் மீதும் வைத்திருந்த ஆதீத காதலால் போலீஸ் வேலையை துறந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்யத் துவங்கினார். கமலின் தசாவதாரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை துவங்கினார், அதன் பின் ஜிம் பாய்ஸ் என கிடைத்த அத்தனை சினிமா முயற்சிகளையும் செய்து வந்துள்ளார். 20 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.


சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், பிகில், பேட்ட, இரவுக்கு ஆயிரம் கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சங்கத் தலைவன்  போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆலம்பனா, கண்ணை நம்பாதே, stunt சில்வா மாஸ்டர் இயக்கத்தில் சமுத்திரகனி அண்ணா நடித்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகர் கராத்தே கார்த்தி..


தனது 14 வருட சினிமா  போராட்டத்தை பற்றி கராத்தே கார்த்தி பகிர்ந்து கொண்டவை...


Central Reserve police ல் பணியாற்றிக் கொண்டிருந்த போது நடிப்பு மீது இருந்த ஆசையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அப்போது என் வீட்டில், மற்றும் என் உறவினர்கள் அனைவரும் என்னை பயங்கரமாக திட்டினார்கள், அரசு வேலையை யாராவது விட்டுவிட்டு சினிமாவிற்கு போவார்களா என்று அனைவரும் அறிவுரையும் சொன்னார்கள். ஆனால் நான் நடிப்புதான் எனக்கு வேண்டும் என்று வாய்ப்பு தேட துவங்கிவிட்டேன். யாரிடம் போய் வாய்ப்பு கேட்பது என்று தெரியாமல் நேராக நடிகர் சங்கத்திற்கு போய் வாய்ப்பு கேட்டேன்.. அங்கே இருந்த சிலர் போட்டோ கொடுங்கள் விஜய் படம், கமல் படம் இரண்டிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள், மறுநாள் கமல் சார் நடித்த தசாவதாரம் படத்திற்கு கூப்பிட்டார்கள். நான் என்னடா எடுத்த உடனையே கமல் சார் படமா சூப்பர் என்று அடுத்த நாள் ஷூட்டிங் போனேன்.அங்கே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்தார்கள் .கேமரா எங்கே இருக்கு என்று கூட தெரியவில்லை ஏமாற்றம் தான் , தொடர்ந்து ஜிம்பாய்ஸ் ஆகா போனேன். அதன் பின் சீரியலில் நடிக்க துவங்கினேன்.


பிறகு தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தேன். இரண்டு பஸ்சிற்கு இடையே தலைகீழாக தொங்கி கார்த்திக் சார்யுடன் சேர்ந்து வில்லனுடன்  சண்டைக் காட்சியில் நடித்தேன் . அப்போது பஸ் எஞ்சின் சத்தத்தில் ஆக்ஷன் , கட் கேட்காது மூச்சு கூட விட முடியாது,  50 கிலோமீட்டர் வேகத்தில் பஸ் போய்க்கொண்டிருக்கும்   first day harness enathu நெஞ்சில் அறுத்து,வலியும் ரத்தமும் வந்தது. இன்றும் எனக்கு தழும்பு உள்ளது.அப்படியான சிரம்மான காட்சிகளில் நடித்தேன். அதன் பின் கார்த்திக் sir ன் யின் கைதி படத்தில் நடித்தேன் .அதை பார்த்த நெல்சன் சார் எனக்கு டாக்டர் படத்தில் வாய்ப்பளித்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய் போன்றோருடன் நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து வந்த முதல் கால் அதுதான் .அதை என்னால் இன்றும் மறக்க முடியாது.  டாக்டர் படத்தில் கோவாவில் வரும் காட்சிகளில் நான் வட இந்தியர் போல் நடித்திருப்பேன் .அதனால் என்னை நிறைய பேர் வட இந்தியர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் பச்சை தமிழன் .எனது சொந்த ஊர் மதுரை தான் என்பதை இங்கே அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து நிறைய இயக்குனர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அது இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டது.  என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் உற்சாகமாக கராத்தே கார்த்தி.

No comments:

Post a Comment