Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Sunday, 24 October 2021

இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் வீரமே வாகை

 இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் ! 


நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. சமீபத்தில் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில்  முழுப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதை விட விரைவாக பணிகள் முடிக்கப்பட்டதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது. 



ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 





இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  

மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் 

Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 


விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். 


விரைவில் இப்படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகளை,  தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

No comments:

Post a Comment