Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Wednesday, 20 October 2021

வேலம்மாளின் பிரக்ஞானந்தா சர்வதேச சதுரங்கப் போட்டியில்

வேலம்மாளின் பிரக்ஞானந்தா சர்வதேச சதுரங்கப் போட்டியில்
சாதனை படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்.


முகப்பேர் வேலம்மாள் மையப் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவன் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, அக்டோபர் 17, 2021 அன்று சர்வதேச அளவில் இணையவழியாக நடைபெற்ற ஜூலியஸ் பியர் சேலஞ்சர்ஸ் சதுரங்கப் போட்டியில் அவருக்கு எதிராக  விளையாடிய அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் யூவை அதிகபட்ச வெற்றிப் புள்ளியான  3-0  கணக்கில்    தோற்கடித்து  முதல் பரிசு  $ 12500- ஐ வென்றார்.

இப்போட்டியின் 8 சுற்றுகளிலும் வெற்றிகளைப் பெற்று நாக் அவுட் கட்டத்தில் ஒரு டிராவை வழங்கி சிறப்பாக விளையாடியதன் மூலம் தன் அபார விளையாட்டுத் திறனை மீண்டும் நிலைநிறுத்தி யுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பான இந்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் சதுரங்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும்   தகுதியினைப் பெற்றுள்ளார்.
 
 அங்கு அவர் உலகின் மிக வலிமையான வீரர்களை எதிர்கொள்ள இருக்கிறார்.
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அற்புதமான ஆட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற சதுரங்க வீரர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சாம்பியன் ஆர்.பிரக்ஞானந்தாவின் வியக்கத்தக்க இச்சாதனையைப் பாராட்டுகிறது மற்றும் அவர் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறது. 

No comments:

Post a Comment