Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Sunday, 24 October 2021

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், நடிகைகள் ஐஸ்வர்யா

                                                 பத்திரிக்கை செய்தி


சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், நடிகைகள் ஐஸ்வர்யா, நக்சத்ரா நாகேஷ் மற்றும் வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட் தேஜா ஆகியோர், வி.டி.கே. ஜீப் ஷோரூமின் புதிய கிளையை திறந்து வைத்தனர்

தனது வாடிக்கையாளர்களுக்கு மிகசிறப்பான சேவைகளை வழங்கி வரும் வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், தற்போது தனது அடுத்த புதிய கிளையை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூரில் அறிமுகம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற வி.டி.கே. ஜீப் ஷோரூம் திறப்பு விழாவில், புகழ்பெற்ற ஃபேஷன் வடிவமைப்பாளர் கருண் ராமன் தலைமையில், இளம் மாடல் அழகிகளின் கண்கவர் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நடிகைகள் ஐஸ்வர்யா, நக்சத்ரா நாகேஷ் மற்றும் வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸின் நிர்வாக இயக்குனர் வெங்கட் தேஜா ஆகியோர் எப்போதும் பிரபலமான SUV-ன் ஜீப் காம்பஸ் மற்றும் சாகச ரேங்லர் மாதிரிகளை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், பல்வேறு திரைப்பிரபலங்களும், ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே, நுங்கம்பாக்கத்தில் ஷோரூம் மற்றும் காட்டுப்பாக்கத்தில் சர்வீஸ் நிலையம் வைத்திருக்கும் வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், தற்போது மூன்றாவதாக, விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் அடங்கிய புதிய கிளையை சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தென்சென்னை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிறைய பயன்பெறும் சூழல் உள்ளது.



புதிய ஜீப் காம்பஸ் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், பேனிக் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல், ஜீப் ரேங்லர் ரூபிகான் தான் ரேங்லர் வகைகளில் மிகவும் உயர்ந்தது ஆகும். அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு அம்சங்களுடன் உள்ள இந்த புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான், ஒரு SUV ஜீப் உண்மையில் எங்கும் செல்லலாம், எதையும் செய்யலாம் என்பதற்கு தகுந்த சான்றாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ரேங்லர் கருப்பு, கிரானைட் கிரிஸ்டல், கிரே, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

















































மேலும் தகவலுக்கு, www.vtk-fca.com என்ற பக்கத்தைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment