Featured post

2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன்

 2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர...

Thursday, 28 October 2021

NETFLIX தனது அடுத்த அதிரடிவெளியீடான

 NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர்

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. 

Click here for video

https://youtu.be/zAUAliz1TKA

 : தீய சக்தியை வென்று, உலகை காக்கும் அதி சக்தியை தரிசிக்க நீங்கள் தயாரா?. NETFLIX இன்று மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. 

இத்திரைப்படம் மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றியிராத மாறுபட்ட தோற்றத்தில் சூப்பர்ஹீரோவாக காட்டியுள்ளது. இவர் பல திறமை வாய்ந்த நடிகர்களான குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இயக்கியுள்ள “மின்னல் முரளி” திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.  மலையாள மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களிலும்   வெளியிடப்படவுள்ளது


படம் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது.. 

காமிக் புத்தகத்தில் தொடங்கி திரைப்படங்கள் வரை சூப்பர் ஹீரோ கதைகளுக்கு நான் எப்பொழுதும் ரசிகன்.  நான் ரசிகர்கள் ரசிக்கும் படியான ஒரு மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ கதையை உருவாக்க விரும்பினேன். மின்னல் முரளியால் அந்த கனவு நினைவாகியுள்ளது. இந்த வாய்ப்பை அளித்த Weekend Blockbusters-நிறுவனத்திற்கு நன்றி. டோவினோ உடைய அர்பணிப்பும், Netflix உடன் இணைந்ததும் எங்களது கனவு நினைவாக்க உதவியுள்ளது. 


மின்னல் முரளி பற்றி டோவினோ தாமஸ் கூறியதாவது, 

 மின்னல் முரளி படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக,  அனைவரையும் திரையுடன் கட்டிபோட்டு வைக்கும்படியான கதை. என்னுடைய கதாபாத்திரம் இதில் புதிரானதாக புதியதாக இருக்கும். சூப்பர்ஹீரோ மின்னல் முரளி எனப்படும்  ஜெய்சன் பாத்திரத்தில் நடிக்கிறேன். இடியால் தாக்கபட்டு, சூப்பர் ஹீரோ சக்திகளை பெரும் ஒருவனது கதை. மின்னல் முரளி கதாபாத்திரத்தை செய்வது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. பாசில் ஜோசப் உடைய பணி அளப்பறியது. உலகெங்கிலும் உள்ள மக்கள் எங்கள் திரைப்படத்தை காணப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 


Weekend Blockbuster  நிறுவனம் சார்பில், ஷோபியா பால் கூறியதாவது... 


நாங்கள் பெரும் சவால் தரக்கூடிய மிகச்சிறந்ததொரு  படத்தை உருவாக்குவதை அறிந்திருந்தோம், இந்த முயற்சி  இதுவரை நாங்கள் செய்திராத புதிய முயற்சி. மிககடினமான காலத்தில் இந்த திரைப்படத்தின் பயணம்

மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. இதில் மிகப்பெரும் சாதனை என்பது இப்படக்குழுவுடன் இணைந்து, இப்படத்தை உருவாக்கியது தான். மின்னல் முரளியை நாம் விரும்பும் சூப்பர் ஹீரோவாக காண்பதற்கு, இப்படக்குழு இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பை தந்துள்ளனர். 


நன்மைக்கும் தீமைக்குமான போரை உங்கள் வீட்டு திரையில் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

No comments:

Post a Comment