Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Sunday, 31 October 2021

தமிழ் சினிமாவில் தொடரும் பாம்பு சென்டிமென்ட்! ஜாக்குவார்

 தமிழ் சினிமாவில் தொடரும் பாம்பு சென்டிமென்ட்! ஜாக்குவார் ஸ்டூடியோஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் ‘மாயப்புத்தக்கம்’.


தமிழ் சினிமாவையும் விலங்குகளையும் அவ்வளவு எளிதாக பிரித்துவிடமுடியாது. குறிப்பாக தமிழ் சினிமாவில் பாம்பை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. அப்படி வெளிவந்துள்ள படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதற்கு ‘நீயா’ முதல் ‘படையப்பா’ வரை பெரிய பட்டியலே போடலாம்.

 அந்த வரிசையில் ஜாக்குவார் ஸ்டூடியோஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘மாயப்புத்தக்கம்’.   


சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் வைரலாகியுள்ள நிலையில் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


கமர்ஷியல்   ஃபேன்டஸி மூவியான இதில் நாயகர்களாக அசோக், ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். நாயகியாக அபர்நிதி நடிக்கிறார். இவர் ‘தேன்’, ‘ஜெயில்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, மதன், பவன், ‘ஆதித்யா டிவி’ லோகேஷ், ‘விஜய் டிவி’ நாஞ்சில் விஜய், KSG வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


படம் குறித்து இயக்குநர் ராம ஜெயப்பிரகாஷ் கூறியதாவது; ‘‘நாகம் உயிரினங்களில் ஒருவகை என்றே நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. நாக வகைகள் என்பது  ஒட்டு மொத்த உயிரினங்களின் ஆத்ம சரீரம் என்பதே உண்மை. எனவேதான் நமது இறை உருவங்கள் அனைத்திலுமே நாக உருவம்  சேர்க்கப்பட்டிருக்கும். இப்படிபட்ட புனிதமான நாக ஆத்மாவின் பல ஜென்மப் பயணமே இந்த ‘மாயபுத்தகம்’’’ என்றார். 


தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விரைவில் பட வெளியீட்டை அறிவிக்கவுள்ளது தயாரிப்பு நிறுவனம்.


தொழில்நுட்ப கலைஞர்கள்:


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ராமஜெயபிரகாஷ்


ஒளிப்பதிவு: ஆறுமுகம்


இசை: ரவி விஜய் ஆனந்த்


பாடல்கள்: விவேகா


எடிட்டிங்: பிரியன்



சண்டைக்காட்சி: ஜாக்கி ஜான்சன்


நடனம்: சுரேஷ்சித்


கலை: ஜான் பிரிட்டோ, முனி கிருஷ்ணா

கிராபிக்ஸ்: ராஜா (VFX)

நிர்வாக தயாரிப்பு: 24AM ரவிகுமார்

தயாரிப்பு: B.வினோத் ஜெயின்

மக்கள் தொடர்பு: பிரியா

No comments:

Post a Comment