Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Tuesday, 26 October 2021

Amala Paul Productions சார்பில், அமலா பால் வழங்கும், இயக்குநர் அனூப்

Amala Paul Productions சார்பில், அமலா பால் வழங்கும், இயக்குநர் அனூப்
S பணிக்கர்  இயக்கத்தில், அமலா பால் நடிக்கும் “கடாவர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !







மிகப்பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கதைகளை ஒரு புகைப்படம் சொல்லிவிடும்’  அது சினிமாவுக்கு அப்படியே பொருந்தும். அதிலும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது ரசிகர்களை படத்தின்பால் ஈர்கும் மிகமுக்கிய கருவி ஆகும். ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் முதல் அம்சமாக அமைவதால்,  ஒரு படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எனும் நிகழ்வு, மிக முக்கியமானதாகிவிடுகிறது. அந்த வகையில் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டும் வகையில்,  தயாரிப்பாளர், நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள “கடாவர்” படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக்,  அவரது பிறந்த நாளான இன்று (26.10.2021)  வெளியாகியுள்ளது.


“கடாவர்” படம் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே, ரசிகர்களின் பேரார்வர்த்தை தூண்டி வருகிறது. இப்படம் இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. வித்தியாசமான இவ்வேடத்திற்காக, நடிகை அமலா பால் ஒரு வார காலம் மருத்துவமனை சென்று, அந்த துறை சார்ந்த, தேர்ந்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்றார். தன்னை முழுதுமாக தயார் செய்துகொண்டு, இப்பாத்திரத்தில் ஒரு அசலான ஃபோரன்ஸிக் சர்ஜனாக கலக்கியுள்ளார்.


“கடாவர்” படத்தினை  அனூப் S பணிக்கர் இயக்கியுள்ளார். Amala Paul Productions சார்பில் அமலா பால் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் அமலா பால் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக ( ஃபோரன்ஸிக் சர்ஜனாக ) முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, ஆதித் அருண், முனிஷ்காந்த் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்தில் ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், அபிலாஷ் பிள்ளை வசனகர்த்தாவாகவும், ராகுல் கலை இயக்குநராகவும், தினேஷ் கண்ணன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment