Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Monday 11 October 2021

வேலம்மாள் பள்ளியில் டெங்குவிற்கு எதிரான தீவிர

வேலம்மாள் பள்ளியில்   டெங்குவிற்கு எதிரான தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது


 டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அக்டோபர் 11, 2021 அன்று முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் நடைபெற்றது.

டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இப்பட்டறையின் நோக்கமாக இருந்தது. சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இதனை  ஏற்பாடு செய்திருந்தது.
 





 

எங்கள் தலைமை விருந்தினர் டாக்டர்.ஷீலா, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நோய்க்கிருமிகளின் தீவிரத்தைப் பற்றி முதுநிலை ஆய்வாளர்  திரு.பரமகுரு அவர்கள் விளக்கினார். டெங்குவின் அறிகுறிகள் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முன்னெச்சரிக்கையான அணுகுமுறையாக இருந்தது,

'நாம் கவனமாக இருந்தால் அச்சுறுத்தலை நிறுத்தலாம்' என்ற செய்தியை இந்த நிகழ்வு வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

No comments:

Post a Comment