Featured post

First Look of Kiara Advani as ‘Nadia’ Unveiled from Yash’s ‘Toxic: A Fairytale for Grown-Ups

 First Look of Kiara Advani as ‘Nadia’ Unveiled from Yash’s ‘Toxic: A Fairytale for Grown-Ups’* One of the most anticipated films of 2026, R...

Saturday, 16 October 2021

பாடல் பதிவுடன் தொடங்கியது ’சீரடி சாய்பாபா மகிமை

 பாடல் பதிவுடன் தொடங்கியது ’சீரடி சாய்பாபா மகிமை’ திரைப்படம்



























60-க்கும் மேற்பட்ட குறும்படங்கள், டெலி பிலிம்களை தயாரித்த பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களில் சிலவற்றை ‘சீரடி சாய்பாபா மகிமை’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் இன்று பாடல் பதிவுடன் தொடங்கியது.


அறிமுகக் கவிஞர் எம்.எஸ்.மதுக்குமாரின் பாடலை, பிரபல பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பாட பாடல் பதிவு நடைபெற்றது. தொடர்ந்து பின்னணி பாடகர்கள் சுபா, கிருஷ்ணராஜ், அனந்து, முகேஷ், ஷில்பா ஆகியோர் பாடும் பாடல்கள் பதிவாகும் பணி நடைபெறுகிறது.


சீரடி சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர் ‘என் நெஞ்சை தொட்டாயே’, ‘திகிலோடு விளையாடு’ படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதோடு, பல குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திரம் ஒன்றில் பல திரைப்படங்களில் நடித்துள்ள வினாயகராஜ் நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களில் பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர்.


ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அபி ஜோஜோ இசையமைத்துள்ளார். பிறைசூடன், எம்.எஸ்.மதுக்குமார், செட்டிநாடு சாம்ராட், ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இணை தயாரிப்பு பணியை வெ.பாலகணேசன் கவனிக்க, மக்கள் தொடர்பு பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.


சீரடி சாய்பாபவின் அற்புதங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி, வசனம் எழுதி ப்ரியா பாலு இப்படத்தை இயக்குகிறார். இவர் பிரபலமான சினிமா பத்திரிகைகளில் நிருபராக பணிபுரிந்தவர். 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இரண்டு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றிருப்பதோடு, 60-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் டெலி பிலிம்களை இயக்கியுள்ளார்.

No comments:

Post a Comment