Featured post

Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium

 Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium INA–GNG Partnership Brings 25 Global Experts to...

Monday, 18 October 2021

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா

 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ். 

பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம். 

          

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகியது. 







‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில்  வெற்றிப்படங்களை டைரக்ட் செய்தவர்,நெல்சன் வெங்கடேசன். மீண்டும் ஒரு புதிய கதை வடியமைப்பில் இப்புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். 

இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் இவருக்கு இப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைதுள்ளது. 

மேலும்,  ‘ஜித்தன்’ரமேஷ், கிட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

ஏற்கனவே இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், எடிட்டர் சாபு ஜோசப், கலை இயக்குநர் சிவசங்கர் மீண்டும் இப்படத்தில் கை கோர்க்கிறார்கள். 

நிர்வாக தயாரிப்பு:அரவிந்த்ராஜ் பாஸ்கரன். 

படபிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. 


தயாரிப்பு: S.R.பிரகாஷ்பாபு,     S.R.பிரபு.



-- johnson, pro.

No comments:

Post a Comment