Featured post

ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க

 ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” ~ திருப்பங்களும் கொண்...

Tuesday, 26 October 2021

தல கோதும்.. ஜெய் பீம் படத்தின் லிரிக்கல் டிராக் வெளியீடு*

 *தல கோதும்.. ஜெய் பீம் படத்தின் லிரிக்கல் டிராக் வெளியீடு*

ஜெய் பீம் படத்தில் இடம்பெற்றுள்ள தல கோதும்.. எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. ட்ரெய்லரே மெகா ஹிட் ஆன நிலையில் தற்போது படத்தின் 'தல கோதும்..' பாடலின் லிரிக்கல் டிராக் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். ராஜூமுருகன்  எழுதியுள்ளார்.

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. ஆகையால், தெலுங்கில் 'சிருகாலி..' எனத் தொடங்கும் இதே பாடலின் லிரிக்கல் டிராக்கும் வெளியாகியுள்ளது. 'சிருகாலி..'  பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார், நரசிம்மன் விருபுத்தூர்  எழுதியுள்ளார்.

தல கோதும் (தமிழ்)- https://www.youtube.com/watch?v=sjhY4k6MVEc


சிருகாலி (தெலுங்கு)- https://www.youtube.com/watch?v=sYQZ52iPC7E

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி, இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.


இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர். 




இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர் பணியாற்றியுள்ளார்

No comments:

Post a Comment