Featured post

Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response

 *Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response*  Dhoni Entertainment’s maiden Tamil production ‘LGM’ is being highly an...

Friday, 21 April 2023

நடிகர் தனுஷ் வெளியிட்ட 'அஸ்வின்ஸ்’ பட டீசருக்கு அமோக

 *நடிகர் தனுஷ் வெளியிட்ட 'அஸ்வின்ஸ்’ பட டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது!*


தமிழ் சினிமாவில் பெரிய திரைகளில் சொல்லப்படும் தனித்துவமான மற்றும் இணையற்ற கதைகள் மூலம், ‘நல்ல கதைகளை எங்களுக்கு படங்களாக கொடுங்கள், நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்’- என்ற சினிமா பார்வையாளர்களின் இந்த மந்திரம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தங்கள் கதை மீது அபாரமான நம்பிக்கை வைத்துள்ள ‘அஸ்வின்ஸ்’ படக்குழு ஒரு வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுத் தர உள்ளது. உலகின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் பட வெளியீட்டிற்குப் பிறகு இதன் ஓடிடி உரிமத்தை வாங்கியுள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது. குறிப்பாக, படத்தின் டீசரை தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் வெளியிட்டு இருப்பது படத்தின் மதிப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. உயர்தரமான காட்சிகள் மற்றும் சிறந்த ஒலி அமைப்புகள் போன்றவை படத்தின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தி உள்ளது. 


வசந்த் ரவி (’தரமணி’ மற்றும் ’ராக்கி’ புகழ்) கதாநாயகனாக நடிக்கிறார். விமலா ராமன், முரளிதரன் (’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படப்புகழ்), சரஸ் மேனன், உதய தீப் (’நிலா கலாம்’ திரைப்படத்திற்காக தேசியவிருது பெற்ற நடிகர்) மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதையானது யூடியூபர்களை சுற்றி நடக்கிறது. அவர்கள் அறியாமலேயே 1500 ஆண்டுகள் பழமையான சாபத்திற்கு பலியாகிறார்கள். அது இருளில் இருந்து மனித உலகில் தீமையை கட்டவிழ்த்துவிடுகிறது.


விஜய் சித்தார்த் (இசை), எட்வின் சகே (ஒளிப்பதிவு), மற்றும் வெங்கட் ராஜன் (எடிட்டிங்) ஆகியோர் படத்தில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள்.

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி வழங்குகிறார், பிரவீன் டேனியல் இணைந்து தயாரித்துள்ளார் மற்றும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார்.

No comments:

Post a Comment