Featured post

Actor Karthi honours the Agricultural Community

 *Actor Karthi honours the Agricultural Community!* *Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture.* *Ac...

Thursday, 27 April 2023

உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும்

 *'உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்' என இந்த தொடரின் ஷோ ரன்னரான டேவிட்  வெயில் தெரிவித்திருக்கிறார்.*


ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் 'சிட்டாடெல்'. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO இந்த இணைய தொடருக்கான பிரத்யேக கதை சொல்லலை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த இணைய தொடர் இந்திய மற்றும் இத்தாலிய நாட்டின் தயாரிப்பாகவும், புத்திசாலித்தனத்துடன் இணைக்கும் பரபரப்பான உளவு தொடராகவும் உருவாகி இருக்கிறது. மேலும் இது உளவு பார்த்தலில் பிரத்யேக பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் குறிப்பிடுகிறது. 



பரபரப்பான ஸ்பை திரில்லரான சிட்டாடெலை உலகளாவிய படைப்பாக உருவாக்கியதில், அமேசானின் ஒரிஜினல் தொடர்பான 'ஹண்டர்ஸை' உருவாக்கிய ஷோ ரன்னரான டேவிட் வெயில் முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். மேலும் 'சிட்டாடெல்' இணைய தொடரின் 'கிரியேட்டிவ் ஸ்பை மாஸ்டர்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது நுட்பமான வழிமுறை, கதை சொல்வதில் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு... ஆகியவற்றால் இந்த இணையத் தொடரை நேர்த்தியாக வடிவமைப்பதில் சிறந்த ஒத்துழைப்பை அவர் வழங்கி இருக்கிறார். 


'கிரியேட்டிவ் ஸ்பை மாஸ்டர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது குறித்து ஷோரன்னரான டேவிட் வெயில் பேசுகையில், '' நாங்கள் உருவாக்கும் இந்த முழுமையான உளவு பிரபஞ்சத்தில் வசனம் உள்ளிட்ட அனைத்து விசயங்களையும் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றிருக்கிறோம். உலகம் முழுவதும் இந்திய தொடரையும், இத்தாலிய தொடரையும் அறிவித்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் உள்ள தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிருக்கிறோம். மேலும் முழு கதையையும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறோம். இந்த இணையத் தொடரில் வெவ்வேறு கலாச்சாரங்கள் மூலம் வெவ்வேறு மொழிகளில் சொல்லப்பட்ட விசயங்கள் உண்மையானது. நாம் கதையை பார்வையிடும் போது.. மேற்கத்திய கண்ணோட்டம் மட்டுமல்லாமல், உண்மையான அசல் தொடர் ஒன்றினை பார்வையிடுவதைப் போல் ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கிறோம். சக படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இதை சாத்தியமாக்கியிருப்பது அசாதாரணமானது'' என்றார். 


ரூசோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியரால் உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்கள் கொண்ட 'சிட்டாடெல்' எனும் இணைய தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் வெளியாகிறது. இந்த உலகளாவிய இணைய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.

No comments:

Post a Comment