Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Wednesday, 19 April 2023

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO

 *அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO  வழங்கும் கிரவுண்ட்பிரேக்கிங் தொடரான சீட்டடெல் பிரீமியர் காட்சிக்காக உலகெங்கிலுமிருந்து ஒற்றர்கள் லண்டனில் ஒன்று சேர்க்கின்றனர்.*


ஏப்ரல் 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒரு பிரமாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் இன் ஒற்றர்கள்  தயாராகி வரும்  நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ஷோ ரன்னர், டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் பிரீமியரில்  பங்கு பெற்றனர். அதிரடிக் காட்சிகள் நிறைந்த ஸ்பை யூனிவர்சின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளான ராஜ் & டிகே மற்றும் சீட்டடெல் இந்திய வெளியீட்டின்  இணை எழுத்தாளர் சீதா ஆர்.மேனன் ஆகியோருடன் சேர்ந்து வருண் தவான், சமந்தா ரூத் பிரபு உட்பட அனைத்து உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்   மற்றும் அவர்களோடு, இத்தாலிய வெளியீட்டிலிருந்து முன்னணி எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் மற்றும் ஷோ ரன்னர்களான   மாடில்டா டி ஏஞ்சலிஸ் மற்றும், ஜினா கார்டினி லண்டன் பிரீமியரில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த பிரீமியர் நிகழ்ச்சியில்  பிரைம் வீடியோ இந்தியாவின் கண்ட்ரி டைரக்டர்  சுஷாந்த் ஸ்ரீராம்  மற்றும் பிரைம் வீடியோவின் ஹெட் ஆஃப் இந்தியா ஒரிஜினல்ஸ் அபர்ணா புரோஹித் ஆகியோரும் கலந்து கொண்டதை காணமுடிந்தது. .


ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த , 6-எபிசோட் அடங்கிய தொடரில் ரிச்சர்ட் மேடன் , பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்;  இதன்  இரண்டு எபிசோடுகள் ஏப்ரல் 28 அன்று வெளியாகும் அதைத் தொடர்ந்து  மே 26 வரை வாரந்தோறும் ஒரு எபிசோட் வெளியாகும். இந்த உலகளாவிய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இதர சர்வதேச மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.



No comments:

Post a Comment