Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Monday, 24 April 2023

இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி

 *இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா - ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்*


'குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் 'வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அதன் போது தனது கர்ப்பிணியான மனைவி உபாசனாவின் கைகளை மடக்கி, அவர்கள் நடந்த தருணங்களை... உண்மையிலேயே அனைவராலும் விரும்பப்பட்டது. 
















இந்நிலையில் துபாயில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ராம் சரணுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த கொண்டாட்ட விழாவில் இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ராம்சரண்- உபாசானா காமினேனி கொனிடேலா தம்பதிகளுடன் பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் சகோதரிகளான சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா, உபாசனாவின் தாயார் திருமதி சோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ஒரு பிங்க் வண்ண உடையில்... தளர்வான ஸ்டைலில் ஜொலிக்க... ராம் சரண் கருப்பு வண்ண உடையில் ஸ்மார்ட் சினோஸ் எனப்படும் வெள்ளை சட்டையிலும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இந்த பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு அனைவரும் அன்பான ஆசீர்வாதத்தை வழங்குவதையும் காண முடிகிறது. ராம் சரணும் உபாசனாவும் கடந்த சில காலமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர்களாக இருந்தனர். அதற்கான உண்மையான காரணத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment