Featured post

SUPER STAR' S SONG TURNS INTO A TITLE!

 SUPER STAR' S SONG TURNS INTO A TITLE! The crew of "Rathamaarey" applauded by Superstar Rajinikanth! "Rathamaarey" ...

Monday 24 April 2023

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் '

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஃபர்ஹானா': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான 'ஃபர்ஹானா' மே 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.











'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது 'ஃபர்ஹானா'வுடன் தங்களின் சிறந்த படைப்புகளுக்கான பட்டியலில் மற்றொரு பெயரைச் சேர்க்கவுள்ளது. 


தற்போதைய தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் 'ஃபர்ஹானா' மட்டுமல்ல, பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை நுணுக்கமாகப் பிரதிபலிக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதையும், அழுத்தமான கதாபாத்திரங்களும் எழுதப்பட்டுள்ளன. 


'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' என தனது முதல் 2 படங்களின் மூலம் வெற்றி கண்ட நெல்சன் வெங்கடேசன் 'ஃபர்ஹானா'வை இயக்கியுள்ளார். மேலும் இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பண்ணையாரும் பத்மினியும்', 'மான்ஸ்டர்' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தேசிய விருது பெற்ற சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார். 


மே 12-ம் தேதி 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது 'ஃபர்ஹானா'.

No comments:

Post a Comment