Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 26 April 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தும் எண்ணம் இல்லை*


*தேவை மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்* 

*ஒரு நிர்வாகம் எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு 2016-21 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக அரசு நிர்வாகம் சான்று*

2016 21 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்...

*அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி*

பள்ளிக்கல்வித்துறையில் 

பெரிய அளவில் மாணவர் சேர்க்கையில் பின்தங்கி இருக்கின்றனர் என்றார் மேலும்,

எப்படி பட்ட வீண் செலவுகளை அவர்கள் செய்து இருக்கிறார்கள் என்பதை சி ஏ ஜி அறிக்கை வெளிப்படையாக காண்பித்து உள்ளது

எங்கள் ஆட்சி அமைந்து எந்த அளவுக்கு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்ந்தி இருக்கிறோம் என்பதை பெருமையோடு கூற முடியும்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் அளவிற்கு மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்றார்

தொடர்ந்து பேசிய அவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்

பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டிய 

60% வீடுகளை முறையாக வழங்க வில்லை என்பதை அறிக்கை காண்பித்து உள்ளது

மேலும், வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் மேப்பிங் நகைச்சுவையாக இருக்கிறது ,  திருச்சியில் வீடுகள் வழங்கியதில் லக்சதீபில் ஒருவர் பயன்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

இதுவரையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள

முறைகேடுகள் செய்த 6 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து இருக்கிறோம் என்று கூறிய அவர்,ஒரு நிர்வாகம் எப்படி செயல்பட கூடாது என்பதற்கு  2016 21  நடைபெற்ற அரசு நிர்வாகம் சான்று என்று குற்றம்சாட்டினார்


திராவிடம் என்ற பெயரைப் பயன்படுத்தும் எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்

ஆனால் அதையே அவர்கள் ஒழுங்காக செய்யவில்லை என்று கூறினார்


முதலமைச்சரை பொருத்தவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை என்றும்

மொத்தமாக 14 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு  மடிக்கணினி வழங்க வேண்டி உள்ளது என்ற அவர்,

தேவைக்கேற்ப நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்


மேலும் அண்ணாமலை வெளியிட்டு வரும் ஆடியோ குறித்து நிதி அமைச்சர் தெளிவான விளக்கத்தை அளித்து விட்டார்

என்றும் ,நாங்களும் அரசியல் செய்கிறோம் என்பதை காண்பித்துக் கொள்வதற்காகவே பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அவ்வப்போது ஆளுநரை சந்தித்து வருவதாகவும் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment