*Sony Pictures Entertainment India வழங்கும் SISU*
இந்தப் படத்தின் காலகட்டம் என்பது, வடக்கு ஃபின்லாந்தின் பின்னணியில், 1944 இல் நிகழ்வது போல் படமாக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சிப்பாயான Aatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்தி கதை நிகழ்கிறது. இப்படம், முதன்முறையாக டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘மிட்நைட் மேட்னஸ் (Midnight Madness)’ எனும் பிரிவில் திரையிடப்பட்டது. பின், ஜனவரி 27, 2023 அன்று ஃபின்லாந்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்ட இப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
கதைச்சுருக்கம் - போரின்போது தனது குடும்பத்தையும் வீட்டையும் இழந்த Aatomi Korpi, லேப்லாந்தின் (Lapland) ஆளரவமற்ற பகுதியில் ஒரு தனிமையான வாழ்க்கைக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறார். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே உள்ளார். அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீச, ஒரு பெரும் தங்கப் புதையல் அவருக்குக் கிடைக்கிறது. தங்கத்தைப் பாதுகாப்பாகச் சேமிக்க, 563 மைல் தொலைவிலுள்ள வங்கியை நோக்கிப் பயணிக்கிறார். வழியில், SS Obersturmführer Bruno Helldorf (Aksel Hennie) என்பவரின் தலைமையில் இயங்கும் நாஜி வீரர்களால் பிடிக்கப்படுகிறார். அந்த நாஜி குழுவின் பணியே, எதிர்ப்படும் எவரையும் எதையும் கொன்று ஒழிப்பதே! ஆனால், அந்த நாஜி குழுவிற்குத் தெரியாத ஒன்று, Aatomi Korpi சாக விருப்பமில்லாத ஒரு தேர்ந்த வீரர் என்பதே அது! மூச்சடைக்க வைக்கும் சாகசத்தையும், எலும்புகள் உடைப்படும் ஆக்ஷனையும், நரம்புகள் தெறிக்கும் த்ரில்லிங்கான அனுபவத்தையும் காணத் தயாராகுங்கள்.
பணிக்குழு :–
எழுத்து, இயக்கம் - Jalmari Helander
ஒளிப்பதிவு - Kjell Lagerroos
இசை - Juri Seppä, Tuomas Wäinölä
Sony Pictures வெளியீடு
No comments:
Post a Comment