*'மா சீதா நவமி'யை கொண்டாடும் வகையில், 'ராம் சியா ராம்' எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.*
இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் 'மா சீதா நவமி' என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 'ஆதி புருஷ்' படக் குழுவினர், சீதா தேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரத்யேக மோசன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு- தன்னலமற்ற தன்மை- துணிச்சல் மற்றும் தூய்மையின் பிம்பமாக திகழும் சீதாதேவியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கிருத்தி சனோன் பிரத்யேகமாகத் தோன்றும் மோசன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் இதனுடன் 'ராம் சியா ராம்..' எனும் பக்தி கலந்த மெல்லிசையின் முன்னோட்டத்துடன் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீராமராக நடித்திருக்கும் பிரபாஸிற்கு துணைவியாக ஜானகி எனும் சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருக்கிறார். மோசன் போஸ்டரில் இவரது தோற்றம், தூய்மை- தெய்வீகம் மற்றும் அந்த கதாபாத்திரத்தின் துணிச்சலையும் பிரதிபலிக்கிறார். மேலும் இதனுடன் 'ராம் சியா ராம்' எனும் பக்தி உணர்வு மிக்க மெல்லிசை ஒலிப்பது... ஸ்ரீராமர் மீது சீதாதேவி வைத்திருக்கும் அசைக்க இயலாத பக்தியினை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. இந்த மோசன் போஸ்டர், பார்வையாளர்களை ஆன்மீகம் மற்றும் பக்தி உணர்வு மிக்க உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மேலும் இந்த பாடலை சச்சே- பரம்பரா எனும் குழுவினரால் இசைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிசன்குமார் ,ஓம் ராவத், பிரசாத் சுதார் இவர்களுடன் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment