*'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3' தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?*
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் இறுதியாக மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3' படம் இந்தியாவிலிருந்து அபரிமிதமான அன்பையும் உற்சாகத்தையும் பெற்றுள்ள நிலையில், தமிழ் நடிகர்களை மார்வெல் ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வைத்தால் யார் எந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
1. *ஸ்டார்-லார்டாக நடிகர் சூர்யா:*
சூர்யாவைத் தவிர வேறு யாரையும் ஸ்டார்-லார்டாக நடிக்க வைக்க நினைக்க முடியாது. அவர் இதற்கு முன்பு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தது மட்டும் இல்லை, அவரது தோற்றத்தின் ஈர்ப்பு, திறமை மற்றும் திரையின் இருப்பு ஆகியவையும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் அவர் நடிக்க சரியாக இருக்கும்.
2. *கமோராவாக நயன்தாரா:*
கமோரா மற்றும் அவரது கொலையாளி உள்ளுணர்வை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அவரது பெண்மை மற்றும் சக்தி வாய்ந்த தோற்றம், பெண்கள் அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதற்கும் அதே சமயம் சிறந்தவர்களாகவும் இருக்க முடியும் என்பதற்கு உதாரணம். ஜவானில் லேடி சூப்பர் ஸ்டாரின் அதிரடி அவதாரம் நிச்சயமாக அவரது வசீகரமான ஆளுமையுடன் அவரது உடல் வலிமையை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கப் போகிறது.
3. *நெபுலாவாக கீர்த்தி சுரேஷ்:*
ஒரு வில்லனிலிருந்து உண்மையான ஹீரோவாக நெபுலா உருவாகிறது மற்றும் உண்மையில் இவள் ஒரு தடகளப் பெண், ஒரு சிறந்த ஆயுதம் மற்றும் நிராயுதபாணியான போராளி. உடற்பேணுதலில் ஆர்வம் மிக்கவர் மற்றும் பல ரசிகர்களின் இதயங்களில் தனது முத்திரையை பதித்த கீர்த்தி நிச்சயமாக நெபுலாவாக நடிப்பதற்கு பொருத்தமானவர்.
4. *விஜய் சேதுபதி குரூட் (Voice):*
இதில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் க்ரூட் மற்றும் அவரது பரிணாமம் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். வின் டீசல் இதற்கு குரல் கொடுத்திருப்பார். அவர் பேசும் மூன்று வார்த்தைகள் ‘நான் க்ரூட்’ (‘I am Groot’). விஜய் சேதுபதியின் பன்முகத்தன்மை அவரை கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
5. *ராக்கெட் ரக்கூனாக விக்ரம் (Voice):*
கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் ஆயுதம் மற்றும் தந்திர நிபுணராக, ராக்கெட் எப்பொழுதும் பிரபஞ்சத்தை காப்பாற்ற தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. ராக்கெட் படத்தில் மிகவும் வேடிக்கையான கதாபாத்திரம். இந்த சிறியவனுக்கு குரல் கொடுப்பதற்கு ’பொன்னியன் செல்வன் 2’ நடிகர் தான் மிகவும் பொருத்தமாக இருப்பார்.
6. *டிராக்ஸாக ஆர் மாதவன்:*
கார்டியன்ஸ் மற்றும் அவரது நுட்பமான ஒன்-லைனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் Drax The Destroyer கொல்ல விரும்புகிறது. இதன் தன்மை எப்போதும் தீவிரமான காட்சிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அமைகிறது. ஆர் மாதவனின் வலுவான உடலும் அவரது சால்ட் அண்ட் பெப்பர் தோற்றமும் நிச்சயம் இதற்கு பொருந்திப் போகும். ‘விக்ரம் வேதா’ ஹங்க் நடிகர் நிச்சயமாக ஒரு நல்ல டிராக்ஸை உருவாக்குவார்.
7. *த்ரிஷா மான்டிஸாக:*
கார்டியன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் அக்கறையுள்ள மற்றும் அன்பான ஒரு நபர் மான்டிஸ். இவள் ஒரு சூப்பர் ஹீரோயின் மற்றும் மக்களின் உணர்வுகளை உணரக்கூடிய திறனும் மாண்டிஸின் சக்தி. த்ரிஷா எப்போதுமே பக்கத்து வீட்டுப் பெண் மற்றும் வசீகரமான ஆளுமையைக் கொண்டிருப்பார். இது முற்றிலும் மான்டிஸின் ஆளுமையை ஒத்திருக்கிறது.
மார்வெல் ஸ்டுடியோஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் மே 5, 2023 அன்று இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment