Featured post

அம்பி " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விண்வெளி நாயகன்

 " அம்பி " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விண்வெளி நாயகன் கமலஹாசன் கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் " அம...

Wednesday, 19 April 2023

இந்தியாவில் முதன்முறையாக மத்திய அரசின் வேளாண் மானியத்தைப் பெற்று

 இந்தியாவில் முதன்முறையாக  மத்திய அரசின் வேளாண் மானியத்தைப் பெற்று  ட்ரான் ஸ்டார்ட்அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ்  சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பல வகையில் பயன்பெற முடியும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ஷாம்குமார் தெரிவித்துள்ளார். 




சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்னி வணிக மையத்தில் கருடா ஏரோஸ்பேஸின் துணை தலைவர் ராகவேந்திரனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஷாம்குமார், கருடா ஏரோஸ்பேஸின் இந்த ட்ரான் மூலமாக விவசாயிகளின் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும் என்றார்.  விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தற்போது ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்வதாக தெரிவித்த அவர் இந்த ட்ரான்கள் இந்த பணியை வெறும் 8 நிமிடங்களில் முடித்துவிடும் என்றார். இதற்கான வங்கிக்கடன்களை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமே விவசாயிகளுக்கு பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்தார். ட்ரானின் விலை ஐந்து லட்சமாக இருப்பின் 40 விழுக்காடு மானியத்தொகையான  2 லட்சம் கழித்து மீதமுள்ள பணத்தை தவணை முறையில் விவசாயிகள் செலுத்தலாம் என்று தெரிவித்த அவர், மனிதரின் மூலமாக பூச்சி  மருந்து தெளிப்பதால் ஒரு ஆண்டில் ஏற்படும் செலவு சுமார்  20 லட்சம் மற்றும் விவசாயிகள் பூச்சி மருந்தினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம் என்றும் கூறினார். குறிப்பாக இந்த ட்ரான் மூலம் ஒரே நாளில் 30 ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

 

 இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும நிறுவனங்கள், பண்ணை அறிவியல் மையம், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு 100% மானியம் பெற அதாவது அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பெற விவசாயிகளுக்கு உதவியுள்ளன. இந்த நிதியுதவி மூலம் கருடா கிசான் ட்ரோன்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் வயல்களில் செய்முறை விளக்கங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்தது.  விவசாய ட்ரோன்களை வாங்குவதற்கும், விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங்களுக்கான இணைப்புகளுக்கும் 75% மானிய உதவியை உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் பெற்றன. இந்த முன்முயற்சி இந்தியாவில் விவசாய ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது, இது சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை அரசாங்கம் ஊக்குவித்து, விவசாயிகளின் விளைச்சலை மேம்படுத்தவும், செலவைக் குறைக்கவும் உதவுகிறது.

No comments:

Post a Comment