Featured post

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers*

 Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in...

Wednesday, 26 April 2023

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான

 *'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்!*


மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். 



இது MCU உடன் இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் கடைசி பயணம். ஆனால், இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மறக்கமுடியாத பயணத்தை உருவாக்கியுள்ளார்.


இந்திய ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜேம்ஸ் கன் நம் இந்திய நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.


கார்டியன்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு இந்திய நடிகரை அறிமுகப்படுத்த முடிந்தால் அது யாராக இருக்கும் என்று இயக்குநரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர், 'RRR' படத்தில் இருந்து, ஜூனியர் என்டிஆர் உடன் வேலை செய்ய தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும், அவரைப் பற்றி கூறும்போது,  ‘அந்தப் படத்தில் அவர் அற்புதமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் இருந்தார்' என்றும் தெரிவித்துள்ளார்.


ஜேம்ஸ் கன்னின் இந்த அறிக்கை, உலக அளவில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் சான்றாகும்.

No comments:

Post a Comment