தனக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, நடிகர் மன்சூர் அலிகானின் பதில் பதிவு!
அய்யா, பெருந்தகையீர்!
எமக்கு ரமலான் வாழ்த்து அனுப்பிய தாங்கட்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள் ... தமிழக ஆறுகள் லட்சக்கணக்கான டன் மணல்கள் தினமும் அள்ளப்பட்டு, கண் எதிரே பாலைவனமாக்கப்படுகிறது.
குடிக்க வைத்து, விஷமான கலப்பட, மதுபோதைக்கு அடிமையாக்கப்பட்டு எமது இளைஞர்கள், வேலை செய்ய திராணி அற்றவர்களாக்கப்பட்டு. காணாமல் தொலைந்து விட்டார்கள்!
இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும். உலக பெரும் முதலாளி வர்க்கத்தின் அடிமைகளாய் சொத்து சேர்க்கும் ஆட்சியாள ஜந்துக்கள்....மருந்து மாபியாக்களின் பிடியிலிருந்து, இந்த மண்ணை காக்க மக்கள் வெகுஜன புரட்சியே,
சமத்துவத்தையும்,
சகோதரத்துவத்தையும்,
இயற்கையையும் காக்கும்!
மண்னின் மைந்தன்
நடிப்பு கூலித்தொழிலாளி
---மன்சூரலிகான்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
No comments:
Post a Comment