Featured post

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து* 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் த...

Monday, 8 May 2023

தங்கர் பச்சான் இயக்கதில் ஓர் ஓரத்தில் சிறிய கேரட்டரானாலும் நடிப்பேன்

 *தங்கர் பச்சான் இயக்கதில் ஓர் ஓரத்தில் சிறிய கேரட்டரானாலும் நடிப்பேன்..*

*தயாரிப்பாளர்,* *நடிகர்* 

*பிரமிட் நடராஜன்!*


வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.


இதில், தயாரிப்பாளர், நடிகர் 

பிரமிட் நடராஜன் பேசியது.. 


ஒரு நாள் தங்கர் பச்சான் சார் பேசினார், அழகி என்று ஒரு படம் எடுக்கிறோம். அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, அதில் உங்கள் பாத்திரத்தின் பெயர் நடராஜன். அதில் நடித்த எனக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. 

அதேபோல், சொல்ல மறந்த கதை படத்தில் நடித்தேன்.


இப் படத்தை பார்த்து விட்டு குறைந்தது 100 பேராவது, நாங்களும் மாமனார் வீட்டில் அவமானப்பட்டிருக்கிறோம் என்று எனக்கு போன் செய்து  இன்று வரை கூறுகிறார்கள். அதேபோல், அப்பா சாமி படத்திலும் நல்ல கேரக்டர் .  


மணி ரத்னம், ரவிக்குமார் அடுத்து தங்கர் பச்சான் மூவரும் எனக்கு மிகப்பெரிய புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இன்று பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் அழகி படத்திற்காகவும், சொல்ல மறந்த கதைக்காகவும் கிடைக்கும் பாராட்டுகள் என்னை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருக்கிறது. அவர் படத்தில் ஒரு ஓரத்தில் நிற்கக் கூடிய பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்.


தங்கர் பச்சான், எனக்கு கொடுத்த எனது போட்டோவில், 'எனது நலன் விரும்பி' என்று என்னை குறிப்பிட்டுள்ளார்..என்றார்.

No comments:

Post a Comment