Featured post

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும்

 *தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!* தன்னம்பிக்கைக்...

Saturday, 17 November 2018

கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் மற்றும்

கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு


டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.




இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் ‘நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்’ என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

எப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment