Featured post

Kambi Katna Kathai Movie Review

Kambi Katna Kathai Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம கம்பி கட்டுன கதை படத்தோட review அ தான் பாக்க போறோம். natty,  Singampuli, Java Sundares...

Monday, 21 January 2019

கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா

கல்லூரி மாணவிகள் பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா.

       விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக பதிவானது. இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்..பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்...நாங்கள் சினிமாவில் பாட முடியுமா" என்று...அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்
அதன்படி  SNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.









No comments:

Post a Comment