Featured post

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

 *ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நி...

Friday, 11 January 2019

இயக்குனர் கே. பாக்யாராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்


'ஓவியா' படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்டார்..!

இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்ட 'ஓவியா' படத்தின் டீஸர்..! 

சமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத் , எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல் பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.

'இமாலயன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம்  'ஓவியா'.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும்  இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக  நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார்.







No comments:

Post a Comment