Featured post

Rise of a New Female Director in Tamil Cinema!

 *Rise of a New Female Director in Tamil Cinema!*  *Maragathamalai - A Super-Cool Fantasy Drama as Summer Treat for Kids!*  *L.G. Movies S. ...

Saturday, 5 January 2019

விஷால் வெளியிட்ட 'அகோரி' படத்தின் டீஸர்!


விஷால் வெளியிட்ட 'அகோரி' படத்தின் டீஸர்!


தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ,நடிகர் சங்க செயலாளர் விஷால் 'அகோரி 'படத்தின் டீசரை இன்று வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

டீஸரைப் பார்த்த விஷால் பபம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுனரை வாழ்த்தினார்.


ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா,
 மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து 'அகோரி' படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .


 சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர்  காமெடி காதல்  சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள   படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும். 


சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாமும் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார். 


படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில்  பிரம்மாண்டமான 
ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன்  நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன. 


படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் 'சஹா 'படத்தின் மூலம்  புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 அடி ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், இவர்  '144 'பட நாயகி. மைம் கோபி , சித்து,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, 
கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் . நான்கு இசையமைப்பாளர்களின்  கூட்டணி இது., ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். 

 'அகோரி' படத்தை  விரைவில் வெளியிட உள்ளனர்.

அகோரி டீஸர் உங்கள் பார்வைக்கு👇






No comments:

Post a Comment