Featured post

Fragile to Fatal: Watch the teaser of KanKhajura, the Hindi adaptation of Magpie releasing on Sony LIV*

 *Fragile to Fatal: Watch the teaser of KanKhajura, the Hindi adaptation of Magpie releasing on Sony LIV* Sony LIV unveils the teaser of its...

Saturday, 5 January 2019

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன " உஷாரு" தமிழில் ரீமேக் ஆகிறது

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன " உஷாரு" தமிழில் ரீமேக் ஆகிறது V.V.கதிர் இயக்குகிறார்.


தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன " உஷாரு" தமிழில் ரீமேக் ஆகிறது..V.V.கதிர் இயக்குகிறார்..

திரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிசனாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப் படும் படங்களே..
ஜிக் ஜாக் இல்லாமல்  யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா..

அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் "உஷாரு"
உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள் படும் ..
சமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் கொண்டாடப் படும் படமாக கருதப் படுகிறது..
சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு... இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்...

இந்த படத்தை ஜீவா நடித்து வெற்றி பெற்ற    தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர்  14 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்..பலத்த போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J.பணீந்திரகுமார் தயாரிக்கிறார்...இவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் லாடம் என்ற படத்தை தயாரித்தவர்..
புதுமுகங்களும் பிரபலங்களும் இனைய உள்ள இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளவர் ராதன்...

விரைவில் படப்பிடிபை துவங்க உள்ளனர்.




No comments:

Post a Comment