Featured post

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த ப...

Thursday, 10 January 2019

மெரினா புரட்சி தணிக்கை விவகாரம்

மெரினா புரட்சி' தணிக்கை விவகாரம் -  7 நாட்களுக்குள் முடிவெடுக்க தணிக்கைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!*

2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர். 

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருந்தோம். 

இந்த சூழ்நிலையில் மாண்புமிகு நீதியரசர் அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்கள். அதன்படி, 

1.  இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ். ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக  வேண்டும். 

2. அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில்  முடிவெடுக்க வேண்டும்.

என உத்தரவிட்டுள்ளார். நீதியை நிலைநாட்டிய நீதிமன்றத்துக்கு நன்றி.

- இயக்குனர் M S ராஜ்

No comments:

Post a Comment