Featured post

Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium

 Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium INA–GNG Partnership Brings 25 Global Experts to...

Wednesday, 18 September 2019

தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்


அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி,
சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள்  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.
நிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச்  செயலாளராக பொறுப்பேற்று  முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின்  முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.
தலைவராக தேடல் தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத்  தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,
தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.
எம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment