Featured post

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

 *பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்*  *மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ள சீமானின் ‘த...

Friday, 10 January 2020

தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்...

தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்...
பண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது புத்தாடை பலகாரங்கள் இவற்றுடன் முக்கிய பங்கு வகிப்பது பண்டிகை அன்று வெளியாகும் தங்களுடைய அபிமான நட்சத்திரங்கள் நடித்த படத்தைப் பார்ப்பது தான். இந்த ஆர்வம் கூலி தொழிலாளிகள் முதல் பெரும் வணிகர்கள் வரை அனைவருக்கும் இருக்கும். தங்களின் நட்சத்திரங்களுக்காக உயரமான கட்-அவுட் வைத்து பாலபிஷேகம் செய்வது, இனிப்புகள் வழங்குவது, முதல் நாள் முதல் கட்சிகளைப் பார்த்து விடுவது, அதிலும் சிலர் தங்களது சொந்த செலவில் தங்களது குடும்பம் தவிர்த்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு டிக்கெட் எடுத்து அவர்களைகளையும் அழைத்துச் செல்வார்கள். இப்படி திரைப்பட வெளியீட்டை அவரவர் வசதிகளுக்கேற்பத் திருவிழாவாகக் கொண்டாடுவர்வர்கள்.

அதன்படி தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வெளியாகும் தலைவரின் 'தர்பார்' படத்தை '18 ரீல்ஸ்'-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி தனது நிறுவனத்திலுள்ள அனைவருடனும் காணவுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ஒவ்வொரு முறை தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் எனக்கு திருவிழா போல தான் இருக்கும். ஆனால், இந்த முறை வெளியாகும் தலைவரின் 'தர்பார்' படத்தை வித்தியாசனமான முறையில் கொண்டாட விரும்பினேன். அதற்காக எனது நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அழைத்துச் செல்ல விருக்கிறேன். ஆகையால், நாளை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

இவ்வாறு 18 ரீல்ஸ்'-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி கூறினார். மற்றும் இவர் தயாரிப்பில், சந்தானம் மற்றும் யோகிபாபு காமெடி சரவெடியில் கலக்க உள்ள  டகால்டி திரைப்படம்,  இம்மாதம் திரைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment