Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Saturday, 18 January 2020

தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்பு கலையான “அடிமுறை”

தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்பு  கலையான “அடிமுறை” கலையில் கலக்கிய நடிகை சினேகா !


மிக நீண்ட காலத்திற்கு பின் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் எல்லோராலும் பேசப்படும், பாராட்ட படும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் மிகை ஆகாது.  பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்பு கலையான “அடிமுறை” கலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “பட்டாஸ்” படத்தில் நடிகை சினேகா முறைப்படி “அடிமுறை”  கலையை அட்டகாசமாக செய்திருப்பது  விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாயடைக்க செய்துள்ளது.


இது குறித்து நடிகை சினேகா கூறியதாவது ...

இந்தப்பாராட்டு அனைத்தும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு உரித்தானது. அவர் தான் இப்படியொரு மிகச்சிறந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அதில் என்னை நடிக்கவும் வைத்தார். நடிகர்களுக்கு சவால் தரும் பாத்திரத்தை உருவாக்கி, அதில் நம்மை பிரகாசிக்க செய்வது இயக்குநர்தான். அதுவும் முன்னணி நடிகரான தனுஷ் நடித்திருக்கும் படத்தில் அவருக்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தை எனக்கும் தந்து, இன்று இத்தனை பாராட்டையும் பெற்று தந்திருக்கிறார். “அடிமுறை” கலையை எனக்கு சொல்லி தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தின் பெருமை பேசும் இப்படியொரு படத்தில் நானும் பங்கு கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இன்று உலகின் தொன்மையான தற்காப்பு கலை தமிழகத்தின் “அடிமுறை” என்பது இப்படம் மூலம் பதிவாகியிருக்கிறது. இது நம் அனைவருக்கும் பெருமையே. இந்நேரத்தில் படத்தில் அதிக கனம்மிகுந்த பெண்பாதிரத்திற்கு இடம் தந்து, எனக்கும்  வெளிச்சம் விழ காரணமாயிருந்த நடிகர் தனுஷ்க்கு மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.


நடிகை சினேகாவின் பாத்திரம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் கூறியதாவது...

 நடிகை சினேகாவின் திரைப்பயணம் மிகப்பெரியது. அவருக்கு என்றும் அழியாத பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது திறமைக்கு அவர் எந்த மாதிரியான பாத்திரத்தையும் மிக எளிதாக செய்துவிடுவார். வெகு சவால் நிறைந்த, தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய, இந்த கதாப்பாத்திரத்தை வெகு அர்ப்பணிப்புடன், மிக நேர்த்தியாக செய்தார். தன் தொழில் மீது மிகுந்த காதலும், நேர்த்தியும் கொண்டவராக அவர் இருந்தார். இப்படத்திற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு, தனது முழு ஆற்றலையும் தந்து இக்கதாப்பாத்திரத்தை செய்தார். இன்று அவரது நடிப்பிற்கு கிடைத்து வரும் பாராட்டும்  வரவேற்பும் எங்கள் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.


சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், தயாரிப்பாளர் T G  தியாகராஜன் கூறியதாவது ...

“comeback”  என்பது சிறந்த நடிகர்களை பொறுத்த மட்டில் ஒரு அர்த்த மற்ற சொல். ஒரு சிறந்த நடிகர் எக்காலத்திலும் மறக்கப்பட மாட்டார். அதிலும் தன் தொழிலை நேசித்து, நேர்த்தியாக தன் நடிப்பு திறமையை,அர்ப்பணிப்புடன் செய்பவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காது குடியிருப்பார். சினேகா அப்படியானவர் தான். அவர் தன் நடிப்பை, உயிராக நேசித்து செய்யக்கூடியவர். அப்படிப்பட்ட சிறந்த நடிகர்கள் ஒரு அற்புதமான கதாப்பாத்திரத்தை செய்யும்போது ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் பெண்கதாப்பாத்திரங்கள் எப்போதும் கனமானதாக,  சிறந்து விளங்ககூடியதாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்போம். இத்தருணத்தில் இத்தனை சிறப்பு மிக்க பெண்கதாப்பத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துகொள்கிறேன். இக்கதாப்பாத்திரத்திற்காக நடிகை சினேகா செய்து கொண்ட முன்னேற்பாடுகளும், பயிற்சியும்,  அவர் அந்த கதாப்பத்திரத்தை அர்ப்பணிப்புடன் செய்த விதமும் பார்த்தபோது, நிச்சயம் ரசிகர்களிடம் பெருத்த பாராட்டு பெறுவார் என எதிர்பார்த்தோம். இன்று அது நிஜாமாகியிருக்கிறது. தமிழகத்தின் தொன்மையை சொல்லும், ரசிகர்கள் பாராட்டும்படியான படத்தை தந்ததில் பெரும் மகிழ்ச்சி என்றார்.

No comments:

Post a Comment