Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Monday, 13 January 2020

லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக்

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஆனந்த விகடன்  வழங்கும் விகடன் அவார்ட்ஸ்   மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ..






உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.  இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.  இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டதும் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது,

"இங்கு சுட்டவர்களும்  குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்" என்றார்.

No comments:

Post a Comment