Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Friday, 3 January 2020

“கல்தா” மிக விரைவில் திரையில் !


“கல்தா” மிக விரைவில் திரையில் ! 

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல்  படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் இயக்குநர் ஹரி உத்ரா, தயாரிப்பாளர் ரகுபதி, நாயகன் சிவ நிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் இயக்குநர் ஹரி உத்ரா கூறியதாவது...
“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வச்சு இந்தப்படம் பண்ணியிருக்கோம். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். அய்ரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை சொன்னபிறகு ரொம்ப ஈடுபாட்டோட இதில் நடிச்சி கொடுத்திருக்கார். புதுமுக நாயகன் சிவ நிஷாந்த் ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். அப்பாவை பற்றி ஒரு அற்புதமான பாடல் வைரமுத்து பண்ணியிருக்கார். இந்தப்படம் எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது அரசியல் கலந்து இருந்தாலும் ரொம்ப தைரியமா இந்தப்படத்த தயாரிச்சிருக்கார் ரகுபதி சார். ஒரு தரமான கமர்ஷியல் படமா இத உருவாக்கியிருக்கோம். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்திட்டு இருக்கு பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கோம் என்றார்.

தயாரிப்பாளர் ரகுபதி கூறியதாவது..
இது எங்களுக்கு முதல் தயாரிப்பு. இயக்குநர் கதை சொன்ன போது ரொம்பவும் பிடித்திருந்தது. எனது மகன் இதில் நாயகனா நடிச்சிருக்கார். படம் நல்லா வந்திருக்கு. உங்கள்  எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன் என்றார்.

நாயகன் சிவ நிஷாந்த் கூறியதாவது....

ஒரு கமர்ஷியல் படமா மட்டுமில்லாம ஒரு நல்ல தரமான படமாகவும் இந்தப்படம் இருக்கும். இந்தப்படத்தில் நான் அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி. எல்ல்லோரும் சேர்ந்து நல்ல படம் பண்ணியிருக்கோம். இதுவரை பார்த்தவங்க எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லியிருக்காங்க. என்னோட நடிப்பு பத்தி மக்கள் என்ன சொல்வாங்கனு பயங்கர எதிர்பார்ப்போட இருக்கேன். படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பாளர்கள் - மலர்க்கொடி ரகுபதி,  செ.ஹரி உத்ரா,
ரா.உஷா

இயக்குநர் - செ.ஹரி உத்ரா,

ஒளிப்பதிவு - B. வாசு

படத்தொகுப்பு - முத்து முனியசாமி

இசை - K. ஜெய் கிரிஷ்

பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் வித்யாசாகர்

பாடியவர்கள் - தேனிசை தென்றல் தேவா, செந்தில் கணேஷ் - ராஜலக்‌ஷ்மி, கார்த்திக், வந்தனா ஶ்ரீநிவாஸ், மது பாலகிருஷ்ணன், கானா இசைவாணி, கானா முத்து.

கலை - இன்ப ஆர்ட் பிரகாஷ்

சண்டைப்பயிற்சி - கோட்டி

நடனம் - சுரேஷ் S

புகைப்படம் - பா. லக்‌ஷ்மண்

மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, ரேகா D one

டிசைன்ஸ் - பிளசான்.

No comments:

Post a Comment