Featured post

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!!*

 *Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை  பெற்று சாதனை படைத்துள்ளது!!* இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதி...

Thursday, 2 January 2020

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்!*

*தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்!*

உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் *‘அவதார்’*. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது.

*ரீல் கட் என்டர்டெயின்மென்ட்* தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் *நரேன் பிரனியாஸ் ஆர்* இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது


.
இப்படத்தில்தான் அவதார் படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. *மரியா ஜெரால்டு* இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது.

இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment