Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Saturday, 18 January 2020

பொங்கல் பரிசு வழங்கி படக்குழுவினரை மகிழ்ச்சியில்

*பொங்கல் பரிசு வழங்கி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ‘லெஜென்ட் சரவணன்’! தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிக்கிறார்!*

லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும்  இப்பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள்.

முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து, மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் லெஜென்ட் சரவணன். அதனைத் தொடர்ந்து, சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான லேபரட்டரி செட்டில், சண்டை காட்சி அமைப்பாளர் அனல் அரசுவின் இயக்கத்தில், அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. நடனத்தைத் தொடர்ந்து, சண்டை காட்சிகளிலும் அபாரமாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவரது அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வியந்து பாராட்டினர்.

தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக 200 மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில் லெஜென்ட் சரவணன் பொங்கல் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

No comments:

Post a Comment