Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Tuesday, 15 December 2020

100 நாடுகளில் படமாகும்

 100 நாடுகளில் படமாகும்"இயேசுவின் 12 சீடர்கள் "

இயேசுவின் பக்தர்கள் உலகமெங்கும் இருப்பது அனைவரும் அறிந்தது தான். அவரிடம் இருந்த சீடர்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்தது தான்.. மகானாகவும், சித்தராகவும், இறைவனாகவும், இறைவனின் தூதனாகவும் ஒவ்வொருவரின் பார்வையிலும் வெவ்வேறு ரூபத்தில் பார்த்தவர் மனதில் குடிகொண்டிருக்கும் அவரின் அற்புதங்களை சொல்ல நேரம் போதாது என்பார்கள். அவரைப் பற்றியும் அவரது | 2 சீடர்களைப் பற்றியும் படமெடுக்க பிரபல தொழில் அதிபரும் மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அல்டாப் அகமது படத்தைப் பற்றி கூறியதாவது, " இயேசுவின் 12 சீடர்கள் " என்று பெயரிட்டு நாங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தில் அந்த 12 சீடர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்களும், ஆச்சர்யங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த படத்தை என்னுடைய மீடியா டைம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறேன். 100 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ் தவிர மற்ற மொழிகள் அனைத்திலும் உருவாக்க உள்ளோம். இயேசுவின் 12 சீடர்கள் பற்றி அறிந்து கொள்ளும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும் . நான் ஏற்கனவே " காதல் கிறுக்கன் "   "  கிரிவலம் "




" ரோஜா ஐ.பி.எஸ்." உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம். இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 300க்கும் அதிகமான படங்களை இந்தியா வெங்கும் வினியோகம் செய்துள்ளேன். இந்தப் படம் தமிழ் திரை உலகின் ஒரு மைல் கல்லாக இருக்கும்." என்று நம்பிக்கையோடு கூறினார்.


அர்ஜசன் __ மம்முட்டி இருவரும் சேர்ந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ." வந்தே மாதரம்" வெற்றிப் படத்தை இயக்கிய நாகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.


முத்துராஜ் கலையையும், சுகுமார் ஒளிப்பதிவையும் கவனிக்கின்றனர்.


வரும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி ஒன்றாம் தேதியான ஆங்கிலம் புத்தாண்டு  தினத்தன்று சென்னையில் 

படப்பிடிப்பு துவங்குகிறது

No comments:

Post a Comment