Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Tuesday, 15 December 2020

MOVIEWUD மூவி ஆப் - தொடங்கி வைத்த இயக்குனர் சேரன்

 *"MOVIEWUD" மூவி ஆப் - தொடங்கி வைத்த இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர்..!*

 *இயக்குனர் சேரன் தொடங்கி வைத்த "MOVIEWUD" மூவி ஆப்..!*

இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் "மூவி உட்" ஆப்பின் வெப்சைட் மற்றும் ஆண்டிராய்ட், ஆப்பிள் ஆப்களை வெளியிட்டார்கள்.

இந்த Moviewud ஆப்-பில் சிறு முதலீட்டு படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரீஸ்கள் என மற்ற ஆப் களை போன்றே அனைத்தும் இடம்பெறும். மேலும்  OTT தளங்களில் முதல் முறையா ய் மேடை நாடகங்களை இத்தலைமுறை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.






சிறு முதலீட்டுப் படங்கள், சுயாதீன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒர் தளமாய் உருவாகியுள்ளார்கள். மிக முக்கியமாய் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் பார்வையாளர்கள் மற்றும் வருமானத்தை பார்த்து தெரிந்து கொள்ள அவர்களுக்கு. தனி டேஷ்போர்ட் அளிக்கப்படுகிறது. படங்களை வாடகை முறையில் 10 ரூ முதல் 50 ரூபாய் வரை பணம் கட்டி ஓர் நாள் வரையும் , ஆறு மாதங்களுக்கு ரு.200 ரூபாயும். வருடத்திற்கு ரூ.365 ருபாய் மட்டுமே.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மூவி வுட் தளத்தில் ஸ்டைல் மிஷின் எனும் ஆல்பம் பாடலை இலவசமாக பார்க்கும் வண்ணம் வெளியிட்டு இருக்கிறது.அது மட்டுமில்லாமல் சமீபகாலமாய் நேரடியாய் திரைக்கு வந்த ஓடீடீபடங்களின் வரிசையில் தெளிவு பாதையின் நீசத் தூரம், விண்வெளி பயணக் குறிப்புகள், மீண்டும் புன்னகை, வருண் வர்ஷா போன்ற திரைப்படங்களை நேரடியாக வெளியிட்டிருக்கிறது. ஸ்ருதி பேதம், தனிமை, சுஜாதாவின் மாமா விஜயம் போன்ற மேடை நாடகங்களை இலவசமாய் பார்க்கலாம்.


"விரைவில் பல புதிய வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்கள் மூவி உட் மூவி ஆப்பில் வெளியாக உள்ளது" என்று மூவி உட் ஆப்பின் CEO ரமேஷ் சுப்பராஜ் மற்றும் அதன் கிரியேட்டிவ், கண்டென்ட் ஹெட் கேபிள் சங்கரும் தெரிவித்தார்கள். 


Andriod: https://play.google.com/store/apps/details

IOS: https://apps.apple.com/sg/app/moviewud/id1539262961

Website: https://www.moviewud.in (வலை)

Mail: info@moviewud.com

Mobile: 7010311658

No comments:

Post a Comment