Featured post

Fire Movie Review

Fire Movie Review ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவ...

Friday, 11 December 2020

நாயகனாகக் களமிறங்கும் 'உறியடி' விஜய்குமார்*

 *நாயகனாகக் களமிறங்கும் 'உறியடி' விஜய்குமார்*


இயக்குநர், நடிகர் விஜய்குமார் 'உறியடி' மற்றும் 'உறியடி 2' என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.




தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை 'உறியடி' 2 பாகங்களிலும் விஜய் குமாரின் உதவி இயக்குநராக இருந்த அபாஸ் இயக்குகிறார்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா  இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இது. முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

No comments:

Post a Comment