Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 11 December 2020

அமேசான் அசல் தொடர் Mirzapur சீசன் 2

 *அமேசான் அசல் தொடர் Mirzapur சீசன் 2 ஐ இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்*


எக்செல் மீடியா அண்டு என்டர்டெயின்மென்ட் தயாரித்து உருவாக்கியஅமேசான் அசல் தொடர் Mirzapur சீசன் 2ல் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து ஷர்மா, ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், ஹர்ஷிதா சேகர் கவுர், அமித் சியால், அஞ்சும் ஷர்மா, ஷீபா சாய்ஷா ராஜா , விஜய் வர்மா, பிரியான்ஷு பெயின்யுலி மற்றும் இஷா தல்வார் ஆகியோர் நடித்துள்ளனர்


இப்போது Mirzapurன் அனைத்து அதிரடிகளும், குதூகலமூம், சிலிர்ப்பும், கதையும் தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைக்கிறது



மும்பை, டிசம்பர் 11, 2020: 2020 அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தை உடனடியாகக் கவர்ந்த அமேசான் அசல் Mirzapur சீசன் 2 இப்போது இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கப்பெறுகிறது டிசம்பர் 11 முதல், இந்த யதார்த்தமான, மனதை பதறச் செய்யும் ஆழ்ந்த கிரைம் நாடகத்தின் இரண்டாவது சீஸனான இது, வெளியான 7 நாட்களில், இந்தியாவில் இச்சேவையில் நேயர்களால் அதிகளவு பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக உருவெடுத்தது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஏற்கனவே சீசன் 3ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், இதுவரை நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்கு, தமிழ் மற்றும் தெலுங்கில் Mirzapurல் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் பார்க்க இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் டிசம்பர் 11 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் வெற்றிகரமான இந்த இந்திய க்ரைம் த்ரில்லர் Mirzapur சீசன் 2 ஐ பார்த்து மகிழலாம்.


பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து ஷர்மா, ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், ஹர்ஷிதா சேகர் கவுர், இஷா தல்வார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், பிற பாத்திரங்களில் அமித் சியால், விஜய் வர்மா, பிரியான்ஷு பெயின்யுலி, அஞ்சும் ஷர்மா, ஷீபா சத்தா, மனு ரிஷி சத்தா மற்றும் ராஜேஷ் தைலாங் ஆகியோர் நடித்துள்ள இத்தொடர், தொடர்ந்து உலகம் முழுவதிலுமிருந்தும் பாராட்டுகளையும் பார்வையாளர்களையும் பெற்றுவருகிறது. பிராந்திய மொழிகளில் நிகழ்ச்சியின் கிடைக்கும் தன்மை இந்த ஈர்க்கக்கூடிய தொடருக்கு மேலும் ஒரு உயர்ந்த இடத்தை உறுதி செய்கிறது.


நிகழ்ச்சியின் டிரெய்லரை இங்கே காண்க: https://www.youtube.com/watch?v=xMKzdQrC5TI


கதைச்சுருக்கம்: அதிகாரம், அரசியல் மற்றும் பழிவாங்கல் Mirzapur உலகில் அதிகரித்துவிட்டது. இது சதித்திட்டங்கள் தீட்டும், ஒருவருக்கொருவரை காட்டிக்கொடுக்கத் தயங்காத, எப்போதும் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லுவதோடு அதைப் பயன்படுத்தவும் தயங்காத மக்களைப் பற்றியதாகும். இந்த சீஸனில் மிர்சாபூர் வெறும் வன்முறையை மட்டும் கொண்டிருக்கவில்லை. இது அரசியலுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் நிலவும் அதிகார மோதலின் ஆழமான பார்வையையும் நமக்கு வழங்குகிறது. இந்த சீஸனிலும் சில வன்முறைகளும் அதீத ஆற்றலும் கொண்ட சில குடும்பங்கள் பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். மிர்சாபூரின் பெண்கள் இன்னமும் அதிக தைரியமாகவும் மேலும் சிக்கல்கள் நிறைந்தவர்களாகவும் மாறிவிட்டனர். தங்கள் இலக்குகளை அடைய எந்த வழியையும் பயன்படுத்த அவர்கள் தயங்குவதில்லை. இறுதியில் யார் வெல்வார்கள்? திரிபாதிகளுக்கு சவால் விட யாராவது இருக்கிறார்களா? இந்த சீஸனின் ஆட்டம் மிகப்பெரியது, ஆனால் விதிகள் மாறவில்லை - இரத்தம் சிந்தாமல் இங்கே உயிர்வாழ முடியாது!


Mirzapur 2 நிகழ்ச்சியின் படைப்பாளிகள்:

இயக்கம் - குர்மீத் சிங் & மிஹிர் தேசாய்

உருவாக்கம் - புனீத் கிருஷ்ணா

நிர்வாக தயாரிப்பாளர்கள் - ரித்தேஷ் சித்வானி & ஃபர்ஹான் அக்தர்

No comments:

Post a Comment